ரூ.2000 நோட்டுகளை வங்கி கணக்குகளில் செலுத்த கட்டுப்பாடு இல்லை!

 
money

சொந்த கணக்கில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

2000 ரூபாய் நோட்டு குறித்து எழும் வதந்திகள் உண்மையல்ல: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று கூறியுள்ளது.  மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூபாய் 20 ஆயிரம் வரை ரூபாய் 2000 நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 20,000 வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

tn

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.  ரூ.2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளை மாற்ற மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 10 நோட்டுகள் வீதம் 20,000க்கு மட்டுமே 2000 நோட்டுக்களை கொடுத்து பிற நோட்டு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.