“விலகுகிறேன்! அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை”- ஜவஹர் அலி

 
“விலகுகிறேன்! அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை”- ஜவஹர் அலி

பணம் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டி அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஜவஹர் அலி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. பணம் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கிறார் எடப்பாடியார். குறிப்பாக முஸ்லிம்களுக்கு சிறிதளவு கூட அங்கீகாரம் கொடுக்க எடப்பாடியார் விரும்புவது இல்லை. முஸ்லிம்கள் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே, கட்சியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை, கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விலகுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.