"தவெக-வுக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை!" - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் அதிரடி விளக்கம்..!
May 6, 2026, 06:20 IST1778028613000
நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைப்பதற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்ற தகவலை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் மறுத்துள்ளார்.
ஆட்சி அமைப்பது தொடர்பாக விஜய் -இபிஎஸ் பேசியதாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுகவின் லீமா ரோஸ் மார்ட்டின் கூறிய நிலையில், அது தொடர்பாக ஓ.எஸ் மணியன் விளக்கம் அளித்துள்ளார்.சென்னையில் ஓ.எஸ். மணியன், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ஐ சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு, வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.தவெக-விற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, 'இல்லை' என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.
அதிமுக தான் தமிழகத்தின் பெரிய கட்சி என்றும், இப்போதைக்கு கூட்டணி, ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்.

