"மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் வேண்டாம்”- அமைச்சர் கோவி. செழியன்

 
ச்

மாணவி பாலியல் சீண்டலுக்குள்ளானதாக எழுந்துள்ள புகார் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, வெகுவிரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கல்லூரிகளில் விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம்; அமைச்சர் கோவி.  செழியன்

இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் தனது எக்ஸ் தளத்தில் ,”கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

anna

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவரும். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திய பின், இருவரும் நடை பயிற்சி சென்றுள்ளனர். அங்கு ஒரு மறைவான இடத்துக்கு சென்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இருவர் மாணவரை அடித்து விரட்டி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி, நீண்ட ஆலோசனைக்கு பின் நேற்று இரவு கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல் படி பெண் காவல்துறை அதிகாரிகள் மாணவியிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.