"டாஸ்மாக்கில் கிக்கில்லை; கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்" : துரைமுருகன்

 
Duraimurugan

அரசு விற்கும் மதுவில் தேவையான கிக் இல்லாததால் சிலர் கள்ளச்சாராயத்தை குடிப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

govt

கள்ளச்சாராயம் குறித்து சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே. மணியின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்த போது, கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது; அரசு மதுவில் கிக் இல்லை. அரசின் மதுபானம் Soft Drink போல அவர்களுக்கு தெரிவதால் கள்ளச்சாராயம் நாடி செல்கின்றனர்.

duraimurugan

தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது; மனிதனாய் பார்த்து திருந்த வேண்டும்.
 நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடப்பது நல்லவனவாக இருக்கட்டும் என்றார்.