"Bun-க்கு GST இல்ல..அதுக்குள்ள வைக்குற கிரீம்க்கு18% GST.. முடியல மேடம்" - நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா ஓனர் வைத்த புகார்..

 
 "Bun-க்கு GST இல்ல.. அதுக்குள்ள வைக்குற Cream-க்கு 18% GST.. கடை நடத்த முடியல மேடம்"

Bun-க்கு GST இல்ல.. ஆனா அதுக்குள்ள வைக்குற Cream-க்கு 18% GST..கடை நடத்த முடியல மேடம்" என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் புகார் தெரிவித்திருக்கிறார்.  

கோவையில் தொழில்துறையினருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  கொடிசியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு தொழில் அமைப்பினர் கலந்துகொண்டனர். பலர் தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்த நிலையில்,  ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம்,  ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் புலம்பியது அதிக கவனம் பெற்றுள்ளது.  

அவர் கேட்ட கேள்வியில், “எங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. உங்க பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மா ( எம்எல்ஏ வானதி சீனிவாசன்) ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். அவங்க வரும்போதெல்லாம் சண்டை போடுறாங்க. எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. அந்த அம்மா கடைக்கு வந்தால்.. பில்லை பார்த்து கேட்பாங்க. ஸ்விட்டுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. அதற்கு இன்புட் உள்ளது. உணவிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி. அதற்கு இன்புட் கிடையாது. காரத்திற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. பேக்கரியில் பிரெட், பண்ணு தவிர எல்லாவற்றிற்கும் 28 % வரி உள்ளது. 

vanathi srinivasan nirmala sitharaman

இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க.. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிர்க்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவிகிதம் வரி என்றால் சண்டை போடுவாங்க. ஒரே பில்லில்.. ஒரு குடும்பத்திற்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட முடியவில்லை. ஒரே பில்லில் வேறு வேறு பொருட்களுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட கம்ப்யூட்டரே திணறுகிறது. இதை பார்த்து கஸ்டமர்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள்.. நீ பன்ணு கொடு.. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். கடை நடத்த முடியல மேடம்..  

ஜூலை மாத GST மூலம் இந்திய அரசுக்கு வருவாய் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தெரியுமா?

குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள்.. இல்லை எல்லாவற்றிற்கும் அதிகரியுங்கள். வடநாட்டில் அதிகம் சுவீட் சாப்பிடுகிறார்கள்.. அதனால்தான் அங்கே இணைப்பிற்கு ஜிஎஸ்டி கம்மி.. காரம் சாப்பிடுவதில்லை. அதனால் அதற்கு ஜிஎஸ்டி அதிகம் என்று உங்கள் எம்எல்ஏ வானதி சீனிவாசன்தான் கூறுகிறார். அப்படியா? நான் அப்படி எல்லாம் இல்லை என்றேன். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள்.  ஜிஎஸ்டி அலுவலர்கள் குழப்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஒரே மாஸ்டர், க்டலை மாவு, மைதா மாவுதான்.. ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டி. அதிகாரிகள் குழப்புகிறார்கள். அவர்களால் கூட கணக்கு எடுக்க முடியவில்லை என்று,  அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.