தேர்வு கிடையாது..! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை - சம்பளம் ₹58,100 வரை..!

 
jobs

தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் கிடையாது மற்றும் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிக்கான விண்ணப்பங்களை 18.09.2026 மாலை 5.45 மணி வரை தபால் மூலம் அனுப்பலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 01
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 03.09.2026
கடைசி தேதி 18.09.2026

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 34 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.09.2026, மாலை 5.45 மணி

விண்ணப்பிக்கும் முறை?

1. விண்ணப்ப படிவத்தை சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://chennai.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மண்டல புள்ளி இயல் இணை இயக்குனர், மண்டல புள்ளி இயல் அலுவலகம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, பழைய கட்டிடம், தரைதளம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை – 600 006.

3. விண்ணப்பங்களுடன் கல்வி தகுதி, சாதி சான்று, இருப்பிட சான்று நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

4. காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

5. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (call letter) அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.