துரைமுருகனின் சாட்டை சேனலுக்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை- சீமான்
Apr 15, 2025, 18:15 IST1744721142000

துரைமுருகன் நடத்தும் சாட்டை வலையொளிக்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
துரைமுருகன் நடத்தும் சாட்டை சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, சாட்டை சேனலில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட கருத்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திரு.துரைமுருகன் அவர்கள் நடத்தும் "சாட்டை" வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும், அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.