தேர்வு கிடையாது..! ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை..!

 
1 1

Repco Home Finance Limited – RHFL தற்போது, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள Manager(மேனேஜர்), Senior Manager(சீனியர் மேனேஜர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

கல்வித் தகுதி

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் (Computer Science) பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்கு மேம்பட்ட எக்செல் (Advanced Excel) மற்றும் தரவு பகுப்பாய்வில் (Data Analytics) நல்ல தேர்ச்சி இருக்க வேண்டும்.

 

வயது வரம்பு: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 20-07-2025 அன்று விண்ணப்பதாரர்கள் திகபட்சமாக 36 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

பதவியின் பெயர் வயது வரம்பு (ஆண்டுகள்)
Manager(மேனேஜர்) அதிகபட்சம் 35 வயது
Senior Manager(சீனியர் மேனேஜர்) அதிகபட்சம் 36 வயது

தேர்வு செயல்முறை

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

எப்படி விண்ணப்பிப்பது:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான repcohome.com மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை அச்சு எடுத்து, அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்யவும். பின்னர், தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களை (self-attested copies) விண்ணப்பத்துடன் இணைக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது (ஸ்கேன் செய்யப்பட்ட உயிர் தரவு மற்றும் சுயவிவரம்) ஐ மின்னஞ்சல் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 05.07.2025.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The DGM (HR), Repco Home Finance Limited, 3rd Floor, Alexander Square, New No. 2/Old No. 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai-600032

மின்னஞ்சல் முகவரி: recruitment@repcohome.com