“அறிவித்தது, அறிவித்ததுதான்... தன்னுடைய நிலைபாட்டில் எந்த மாற்றம் இல்லை”- ராமதாஸ்

 
பா.ம.க. ‘35’ : சோதனை முடிந்து சாதனைக் காலம் தொடங்கியது... இனி வெற்றியே! - ராமதாஸ் மடல்

தன்னுடைய நிலைபாட்டில் எந்த மாற்றம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வன்மம் தான் காரணம்.. வன்னியர் இட ஒதுக்கீடு திமுக போடும் நாடகம் - ராமதாஸ் காட்டம்..

பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை செயல்தலைவராக மாற்றி அக்கட்சியின் நிறுவனர் தலைவரும் தந்தையுமான ராமதாஸ் அறிவித்திருந்தார். பாமகவின் தலைவராக தான் பொறுப்பேற்று கொள்வதாக கூறியிருந்தார். தந்தை- மகனுக்கான மோதல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியதால் மீண்டும் அன்புமணி ராமதாசை பாமகவின் தலைவராக நியமிக்க கோரி ராமதாசின் மகள்கள் காந்தி, கவிதா சமாதான பேச்சுவார்த்தை செய்தனர். இருப்பினும் தன் முடிவிலிருந்து பின்வாங்க போவதில்லை என ராமதாஸ் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் சென்னையிலுள்ள அண்புமணி ராமதாஸ் இல்லத்தில் செஞ்சி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்டோருடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். பாமக தலைவராக தானே தொடர்வதாக அன்புமணி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் பாமக நிர்வாகிகளுடன் தனித்தனியாக அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். 

அதேசமயம் பாமக நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் பாலு, முன்னாள் எம்.பி செந்தில்குமார், வன்னியர் சங்க மாநில செயலாளர் சேலம் கார்த்திக், பசுமை தாயம் அருள் ஆகிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் தைலாபுரம் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை சட்டப்பூர்வமாக நீக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார். அதற்காக தைலாபுரம் தோட்டத்திலேயே பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக, அக்கட்சி மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். கட்சி விதிப்படி பொதுக்குழுதான் தன்னை தேர்வு செய்ததாகவும், தேர்தல் ஆணையமும் அதை அங்கீகரித்ததாகவும் அன்புமணி கூறியிருந்த நிலையில், ராமதாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் தைலாபுரம் தோட்ட ஆலோசனையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “நிர்வாகிகள் யாரும் சோர்ந்து போகாதீர்கள், சில தினங்களில் சலசலப்பு சரியாகி விடும்... அறிவித்தது, அறிவித்ததுதான். தன்னுடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.