விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை!!
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது.

தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது. தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.


