"திமுக, காங்கிரஸ் வென்றதில் எந்த பலனும் இல்லை" - தமிழிசை சௌந்தரராஜன்

 
Tamilisai

எதிரணியில் இருந்துகொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்கவேண்டியதை கிடைக்கவிடாமல் செய்கிறார் ஸ்டாலின் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai

சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது , திரணியில் இருந்துகொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்கவேண்டியதை கிடைக்கவிடாமல் செய்கிறார் ஸ்டாலின். நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவோம். நான் எதையும் எதிர்பார்த்து கட்சியில் இல்லை. எனக்கு கட்சி கொடுக்கிற அங்கீகாரத்தை ஏற்று பணியாற்றி வருபவள். 

tamilisai

தமிழ்நாட்டில் பாஜக அதிகமாக வாக்குகள் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் இடங்கள் கிடைக்கவில்லை என்பதை எல்லா தொண்டர்களையும் போலவே கவலையாக பார்க்கிறேன் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட, எந்த பலனும் இல்லாமல் காங்கிரஸுக்கும், திமுகவிற்கு அதிக இடம் கிடைத்திருக்கிறது என்பதுதான் கவலை  என்றார்.