“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்த 'தேசியத் தலைவர்' திரைப்படத்தை வெளியிட தடை இல்லை”

 
பசும்பொன் தேவர் பசும்பொன் தேவர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்த 'தேசியத் தலைவர்' திரைப்படத்தை வெளியிட தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்


மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மானகிரி  செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில், “தேசிய தலைவர்" திரைப்படம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திரைப்படத்தில் மற்றொரு சமூக தலைவரான தியாகி இமானுவேல் சேகரன் சற்று மரியாதை குறைவான முறையில் காட்டப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இது இரு சமூகத்தினர் இடையே தேவையற்ற சாதிய பிரச்சனைகளை உருவாக்கும். ஆகவே பொதுவெளியில் திரையிடப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து "தேசிய தலைவர்" படத்தை திரையிடவும், விதிகளுக்கு உட்பட்டு  சாதிய பிரச்சனைகளை தூண்டும் காட்சிகளை நீக்கவும், சமூக வலைதளங்களில் பிரச்சனையை தூண்டும் வகையில் பதியப்பட்டுள்ள போஸ்டர்கள் தொடர்பாக விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதுவரை "தேசிய தலைவர்" படத்தை திரையிட இடைக்கால தடை விதித்து உத்தரவிடக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு தரப்பில், சென்சார் போர்டு வழங்கிய சான்றிதழை பதில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில், இந்தப் படத்தை ஒரு வல்லுநர் குழு பார்வையிட்டு அதில் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் எந்த காட்சிகளும் இல்லை என்று உத்திரவாதம் தந்த பின் பிறகு திரையிட அனுமதிக்க வேண்டும். இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது  என வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஒரு படத்தை பார்ப்பதற்கு முன்னரே  முறையீடு செய்வது ஏற்படாது அல்ல. சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே, இது குறித்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியது உள்ளது. எனவே,இந்த,நிலையில் எந்த  உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி  வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.