“தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை”- கிரிஷ் சோடங்கர்
புதுச்சேரி தமிழகமும் வெவ்வேறு மாநிலங்கள். கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வழிமுறையே புதுச்சேரியில் கையாள்வோம் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை இறுதி அடைந்துள்ளது. இத்தேர்தலை முழுவீச்சில் எதிர்க்கொள்ள தயாராகியுள்ளோம். திமுகவுடன் பேச காங்கிரஸில் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கம் தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், தேவதாஸ் ஆகியோர் அடங்கிய குழு அமைத்துள்ளோம். தமிழகத்தில் திமுகவும், புதுச்சேரியில் காங்கிரஸும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும். கூட்டணியில் எத்தனை தொகுதியில் கட்சிகள் போட்டியிடுவது என்பது பற்றி பேச்சுவார்த்தைக்குழு முடிவு செய்யும். தற்போதைய ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதால் மக்கள் இண்டியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றார்.
இதை தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு திமுகவுடன் பேசி எத்தனைத்தொகுதிகள் என்ன முடிவு எடுப்பார்கள். தமிழக பார்முலாதான் இங்கு புதுச்சேரியில் பின்பற்றப்படும். பேச்சுவார்த்தையில் கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம். இது கூட்டணியிலுள்ள அனைத்துக்கட்சியும் பொருந்தும். தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பார்கள். பேசி தீர்வு காண்போம். கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வழிமுறையே புதுச்சேரியில் கையாள்வோம். புதுச்சேரி தமிழகமும் வெவ்வேறு மாநிலங்கள். இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் புதுச்சேரியில் நடைபெறும். கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பதை குழு அமைக்கும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அன்றைய தினம் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.

