2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை - ஈபிஎஸ் திட்டவட்டம்

 
tn

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ep

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், பிரதமர்  தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பாஜக தலைவர் ஜே பி நட்டா ரோடு ஷோ நடத்தினார்கள் . இருப்பினும்  பாஜக வெற்றி பெறவில்லை.  மற்ற கட்சிகளில் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுகவை பொறுத்தவரை நான் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன். 2019 மக்களவைத் தேர்தலை விட ஒரு சதவீத அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதால் அதிமுகவுக்கு இது வெற்றியே.  திமுக , பாஜகவை விட அதிமுக தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.  திமுக 2019ல் பெற்றதை விட 6. 59 சதவீத வாக்குகளை குறைவாகவே பெற்றுள்ளது. சசிகலா , ஓபிஎஸ் பிரிந்து சென்றதால் தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது என்றார்.

EPS

தொடர்ந்து பேசிய அவர் , தேர்தலில் இருந்திருந்தால்,  வந்திருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை.  2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. எஸ்.பி. வேலுமணிக்கும் எனக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக பாஜக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை எந்த பிளவும் இல்லை என்றார்.