அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! எச்சரிக்கை வானிலை மையம்

 
rain

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை


வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நவம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையகூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மியான்மர்-வங்கக்கடல் கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது  நவம்பர் 7, நவம்பர் 8, 2025  ஆகிய இரண்டு நாட்கள் மாநிலத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது