இன்னும் 4 நாள் தான் டைம்...தமிழ் தெரிந்தால் அரசு வேலை! மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்..!
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், தமிழ் புலவர், உதவி மின்பணியாளர், பாரா, குருக்கள் அர்ச்சகர், காவலர், உதவி பரிச்சாரகர் ஆகிய பணிகளில் மொத்தம் 19 இடங்கள் நிரப்பப்படுகிறது.
இதில் இளநிலை உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், காவலர், உதவி பரிச்சாரகர், பாரா ஆகிய பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி பொறியாளர் பணிக்கு கட்ட பொறியியலில் இளநிலைப் பட்டம் அல்லது பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சீட்டு விற்பனையாளர் பணிக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் புலவர் பணிக்கு ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் தமிழிலில் B.lit அல்லது பிஏ, எம்ஏ, எம்லிட் ஆகியவற்றை படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியிடங்கள் குறித்த கல்வித்தகுதியை அறிந்து கொள்ள அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
மாத சம்பளம் எவ்வளவு?
உதவி பரிச்சாரகர் பணிக்கு மாத சம்பளாக ரூ.10,000 முதல் ரூ.31,500, காவலர், குருக்கள் பணிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800, பாரா பணிக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400, உதவி மின்பணியாளர் பணிக்கு ரூ.16,600 முதல் ரூ.52,400, தமிழ் புலவர், சீட்டு விற்பனையாளர் பணிக்கு ரூ.18,500 முதல் ரூ.58,600, உதவி பொறியாளர் பணிக்கு ரூ.36,700 முதல் ரூ.1.16 லட்சம், இளநிலை உதவியாளர் ரூ.18,500 முதல் ரூ.58,600 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கு கல்வித்தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதாவது, விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, உரிய தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பம் நவம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 28ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்னும் சில முடிய இருப்பதால், உடனே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


