இன்னும் 4 நாள் தான் டைம்...இந்த பணிகளை உடனே முடிச்சிடுங்க..!
2024-2025 நிதியாண்டிற்கான உங்கள் வருமான வரி வருமானத்தை, (ITR) நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31, 2025ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும். தாமதமாக தாக்கல் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாமதமாக தாக்கல் செய்தால், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ரூ.1,000 அபராதமும், ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.
டிசம்பர் 31க்குள் தாமத ஐடிஆர் கூட தாக்கல் செய்யப்படவில்லை என்றால், வருமானவரி ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் அல்லது முற்றிலும் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், வருமானவரி சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படுவதால், மொத்த வரி சுமை அதிகரிக்கும்.
தொடர்ச்சியாக ஐடிஆர் தாக்கல் செய்யாமல் இருப்பது, உங்கள் டாக்ஸ் புரொஃபைலை பலவீனப்படுத்தும். இதனால் வங்கி கடன், வீட்டு கடன், கிரெடிட் கார்டு மற்றும் விசா விண்ணப்பங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், வருமானவரி துறையின் கண்காணிப்பும் அதிகரித்து நோட்டீஸ் வரும் வாய்ப்பும் உள்ளது.
வருமான வரித்துறை பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கி இருக்கிறது . நீங்கள் பான் கார்டு வைத்திருந்தால் பெற்றிருந்தால் முதலில் வருமானவரித்துறை இணையதளத்திற்கு சென்று உங்களுடைய பான் உடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பாருங்கள் இல்லை என்றால் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அதனை இணைத்து விடுங்கள். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உங்களின் பான் கார்டு செயலிழந்து போய்விடும். உங்களுடைய வருமானவரி கணக்குத் தாக்கல் வண்டி டெபாசிட்டுகள் முதலீடுகள் உள்ளிட்ட அனைத்துமே மேற்கொண்டு உங்களால் செயல்படுத்த முடியாமல் போகலாம் .
பிரதமர் வீட்டு வசதி திட்டம்... பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் மானியமாக பெறுவதற்கான விண்ணப்ப காலக்கெடு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை பெற விரும்புபவர்கள் தங்களின் ஆதார், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 31 கடைசி தேதி ஆகும். ஏதேனும் சூழ்நிலையில், உறைபனி அல்லது மழையால் பயிர் சேதமடைந்தால், அரசாங்கம் முழு இழப்பீட்டை வழங்கும்.


