கரப்பான் பூச்சி ஜனதா இயக்கத்தின் பின்னணியில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சக்திகள் இருக்கின்றன - ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்..!

 
1

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேட்டி;

நீட் தேர்வு பிரச்னையை தொடக்கத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. பின்னர் திசைமாறி சொந்த அரசியலை செய்யத்தொடங்கின. போராட்டத்திற்கு வரும் இளைஞர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகி இருக்கும். இந்த போராட்டங்களின் பின்னணியில் உள்நாட்டிலும், உலகளவிலும் சக்திகள் இருக்கின்றன. அந்த நாடுகள் இந்தியா, ஒரு வலிமையான மற்றும் கல்வி வளம் நிறைந்த நாடாக உருவாகுவதை தடுத்து, நம் நாட்டை அழிக்க விரும்புகின்றன.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், அதை கைவிட்டுவிட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான பங்கினை அளிக்க வேண்டும். இன்று ஆயிரக்கணக்கான புத்தொழில் நிறுவனங்களினால் இந்தியா ஒட்டுமொத்த உலகிற்கும் முன் மாதிரியாக திகழ்கிறது.இளைய தலைமுறையினர் எந்த நன்மையும் செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை. எதையும் சீர்குலைக்காதீர்கள்.

இவ்வாறு இந்திரேஷ் குமார் கூறினார்.