"234 வேட்பாளர்கள்.. ஒரே மேடை! இன்று திருச்சி மாநாட்டில் 234 நாதக வேட்பாளர்கள் அறிமுகம்!
இன்று திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
இந்த மாநாட்டின் உச்சகட்ட எதிர்பார்ப்பு என்னவென்றால், சீமான் எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறார்? என்பதுதான். கடந்த சில தேர்தல்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டியிட்ட சீமான், இந்த முறை எந்தத் தொகுதியைத் தேர்வு செய்வார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக உள்ளது. இந்த ரகசியத்தை இன்று திருச்சி மண்ணில் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
2016 முதல் இன்று வரை நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி என்பது பலரையும் வியக்க வைத்துள்ளது:
- 2016 சட்டமன்றத் தேர்தல்: 1.07%
- 2019 நாடாளுமன்றத் தேர்தல்: 3.9%
- 2021 சட்டமன்றத் தேர்தல்: 6.58%
- 2024 நாடாளுமன்றத் தேர்தல்: 8.2%
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் இந்த வாக்கு சதவீதம், வரும் 2026 தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

