"பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதில்லை"- மது பிரியர்கள் மகிழ்ச்சி

 
tasmac

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு, ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் இருந்த நிலையில், தவெக அரசு பொறுப்பேற்ற 2 நாட்களில் இந்த நிலை மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களுக்கு, ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெற்று, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, இந்த 10 ரூபாய் கூடுதல் வசூல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மது பாட்டில் வாங்கும்போது செலுத்திய ரூ.10-ஐ, காலி பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும்போது அதே டாஸ்மாக் கடையில் உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு, ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் இருந்த நிலையில், தவெக அரசு பொறுப்பேற்ற 2 நாட்களில் தேனியில் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதில்லை என மதுபிரியர்கள் கூறுகின்றனர். முன்பு கேட்ட சரக்கு கொடுக்க மாட்டார்கள். தற்போது எந்த சரக்கு கேட்டால் கொடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.