நிரம்பியது வைகை அணை - 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

 
tn

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையானது 71 அடி உயரத்தில் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகையின் நீர் பிடிப்பு பகுதிகளான மேகமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

tn

நேற்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் 5 மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது . அத்துடன் பிற்பகல் அல்லது மாலைக்குள் 70அடியை எட்டியது.  ஏழு பெரிய மதகுகள் வழியாக  நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்தது.

tn
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 70 அடியை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அணைக்கு வரும் 2,375 கனஅடி நீர் அணையின் மேல் மதகு வழியாக திறக்கப்பட்டுள்ளது. வைகை அணை நிரம்பியதால் தேனி,திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கரையோர கிராம மக்கள்  குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளது.