‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ பிரிவின் தீம் பாடல் வெளியீடு..!
‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force) பிரிவிற்கான அதிகாரப்பூர்வத் தீம் பாடலை (Official Theme Song) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அதிரடிப்படையின் தொடக்க விழாவில், வீரம் மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக விளங்கும் பெண் காவலர்களின் அணிவகுப்பு, நவீன ரோந்து வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்திகைகள் அடங்கிய இந்த எழுச்சிமிக்க வீடியோ பாடல் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது.
“நெஞ்சம் எப்போதும் இரும்புப் பெண்ணே… நெஞ்சம் பூக்கும் அறிவுப் பெண்ணே…” போன்ற உத்வேகம் தரும் வரிகளுடன், பெண் காவலர்களின் அசாத்திய துணிச்சலையும், சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் பறைசாற்றும் வகையில் இப்பாடல் மிகக் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
The Government of Tamil Nadu released a song to the Singappen Special Task Force pic.twitter.com/8oHpuQCHOb
— Vignesh Theni (@Vignesh_twitz) June 14, 2026

