எடப்பாடி வீட்டிலேயே திருட்டு!

 
இபிஎஸ்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் மின் வயர்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் மின் மோட்டார் வயர்களை வெட்டி, மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து, நேற்று நடந்த சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதாரங்களுடன் பேசிய நிலையில், தற்போது 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. நெடுங்குளம் பகுதியில் உள்ள விவசாய கிணறு, ஆழ்துளை கிணறு மோட்டார்க்கு செல்லும் மின்சார வயர்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி திருடி சென்றுள்ளனர். கூழாம்பட்டி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.