புதுச்சேரியில் தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயர்வு- நாளை முதல் அமல்

புதுவை சினிமா தியேட்டர்களில் கட்டணம் திடீர் உயர்விற்கு, கலெக்டர் வல்லவன் அனுமதி வழங்கி உள்ளனர்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் எலைட், பால்கனி, டீலக்ஸ் வகுப்புகளுக்கு ரூ.170, பிரீமியம் வகுப்புகளுக்கு ரூ.130 கட்டணமாக நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஏசி தியேட்டர்களுக்கு பாக்ஸ் ரூ.180, எலைட், பால்கனி, டீலக்ஸ், ரூ.170, முதல் வகுப்பு ரூ.130, 2ம் வகுப்பு ரூ.100, 3ம் வகுப்பு ரூ.60 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நகர், புறநகர், கிராமப்புறங்களில் என 15க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. தியேட்டர்களின் பராமரிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என புதுவை அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் வல்லவன் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் எலைட், பால்கனி, டீலக்ஸ் வகுப்புகளுக்கு ரூ.170, பிரீமியம் வகுப்புகளுக்கு ரூ.130 கட்டணமாக நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஏசி தியேட்டர்களுக்கு பாக்ஸ் ரூ.180, எலைட், பால்கனி, டீலக்ஸ், ரூ.170, முதல் வகுப்பு ரூ.130, 2ம் வகுப்பு ரூ.100, 3ம் வகுப்பு ரூ.60 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.