காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி வெள்ளுடை வேந்தர் தியாகராயர் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
stalin stalin

வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!

அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!


தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் - நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.