வளர்ப்பு தந்தையை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் - மகளை திருமணம் செய்து தராததால் ஆத்திரம்!!

 
tn

வளர்ப்பு தந்தையை மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gun

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடையம் ஊராட்சியை சேர்ந்தவர் கோவிந்தன். 47 வயதான இவர் இவருக்கு கலையம்மாள் என்ற மனைவியும், மகள்களும் இருந்துள்ளனர். அத்துடன் கோவிந்தன் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பாரதி என்பவரை வளர்த்து வந்துள்ளார்.  பாரதியின் தாய் உயிரிழந்த நிலையில் தந்தை கண்ணனும் கண்டுகொள்ளாமல் விட்டதால் கோவிந்தன் பாரதியை வளர்த்து வந்ததாக தெரிகிறது.

gun shot

இந்நிலையில் நேற்று மாலை கோவிந்தனுக்கு பாரதிக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதில் நாட்டுத் துப்பாக்கியால் கோவிந்தன் மற்றும் அவரது மனைவி கலையம்மாளை  பாரதி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.  இது குறித்த விசாரணையில் , வளர்ப்பு தந்தையின் மூத்த மகளை தான் விரும்புவதாக கூறி பெண் கேட்ட நிலையில் பெண்ணிற்கு விருப்பமில்லாததால் தந்தை கோவிந்தன் மறுத்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த பாரதி இந்த சம்பவத்தை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.