பைக் மீது போதையில் படுத்திருந்த நபரை கீழே தள்ளிவிட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர்

 
திருட்டு

பழனி அருகே இரு சக்கர வாகனத்தில் போதையில் படுத்திருந்த நபரை, மர்ம நபர் ஒருவர்  கீழே தள்ளிவிட்டு பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பழனி அருகே கோதைமங்கலம் பகுதியில்  அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. காமராஜர் நகரை சேர்ந்த லோகநாதன் கடையில் மது அறுந்திவிட்டு போதை அதிகமானதால் இருசக்கர வாகனத்தில் படுத்து உள்ளார்.  அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர்  இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் படுத்து உறங்கியவரை கீழே தள்ளி விட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றுள்ளான். 


போதை தெளிந்து லோகநாதன் எழுந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் தொலைந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து பழனி நகர போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.