'துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிச்சாமி' - ஏர்போட்டில் கோஷமிட்ட இளைஞர்!

 
'துரோகத்தின் அடையாளம்  எடப்பாடி பழனிச்சாமி' - ஏர்போட்டில் கோஷமிட்ட இளைஞர்!

மதுரையில் துரோகத்தின் அடையாளம் என எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.  

சிவகங்கை மாவட்டத்தில்  நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக , முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி, விமானம் மூலம் மதுரைக்குச் சென்றார்.  மதுரை விமான நிலையம் சென்றடைந்த  எடப்பாடி பழனிச்சாமி,  விமான நிலையத்திலிருந்து ஏர்லைன் பேருந்தில் வெளியே வந்தார்.  அப்போது ஏர்லைன் பேருந்தில்  உடன் பயணித்த இளைஞர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை  துரோகத்தின் அடையாளம் என கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.  

'துரோகத்தின் அடையாளம்  எடப்பாடி பழனிச்சாமி' - ஏர்போட்டில் கோஷமிட்ட இளைஞர்!

அந்த இளைஞர், “எடப்பாடி பழனிசாமி துரோகத்தின் அடையாளம். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம் என கோஷமிட்டார்.  சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக வழங்கியவர்” என்று கூறினார். தொலைபேசியில் வீடியோ எடுத்தப்படியே கோஷமிட்ட அந்த இளைஞரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர்.  பின்னர்  இளைஞரை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த இளைஞர் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.