ராஜேந்திர பாலாஜியை தோற்கடித்த இளம்பெண் அமைச்சராகிறார்!
May 10, 2026, 08:41 IST1778382660675
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற இளம்பெண் கீர்த்தனா விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியின் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவரை தோற்கடித்தவர் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்ட இளம்பெண் வேட்பாளரான கீர்த்தனா. இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ அசோகனையும் பெருவாரியான வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற இளம்பெண் கீர்த்தனா விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

