பீட்டர் பார்க்கரை மறந்த உலகம்.. ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!

 
1

ஸ்பைடர் மேன் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கும் இப்படத்தில் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிஸா காலோன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்பைடர் மேன் முதல் பாகமான ‘ஸ்பைடர் மேன்: ஹேம் கம்மிங்'கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, 'ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹேம் படமும், கடைசியாக 3-வது பாகமாக 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படமும் வெளியாகின. இந்த மூன்று திரைப்படங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.

இதைத் தொடர்ந்து உருவாகி இருக்கும் 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' 4-வது பாகமாக உருவாகி இருக்கிறது. இதனை டெஸ்டின் டேனியல் இயக்கி உள்ளார்.இந்த திரைப்படம், வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் பைனல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹல்க் மற்றும் ஸ்பைடர் மேன் இடையேயான அதிரடி மோதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்தப் படம் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைந்த மார்வெல் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.