வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வயதான தம்பதி உயிரிழப்பு!!

 
ttn

வீட்டின் மண் சுவர் இடிந்து கணவன் - மனைவி இறந்த சம்பவம் செங்கல்பட்டில் அரங்கேறியுள்ளது.

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஜெமின் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேதாச்சலம். இவருக்கு வயது 80  இவரது மனைவி செந்தாமரை (72).  கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக இவர்களின் வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்துள்ளது.  இந்த சூழலில் இரவு இருவரும் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது . இதில் சம்பவ இடத்திலேயே கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

Two-people-were-killed-when-a-wall-collapsed-due-to-continuous-rain-in-Chengalpattu

இன்று காலை இந்த தம்பதியின் பேத்தி தாத்தா மற்றும் பாட்டி க்கு தேநீர் கொண்டு வந்தபோது சுவர் இடிந்து இருவரும் உயிர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இதுகுறித்து சித்தாமூர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.