சபதம் முடிவுக்கு வந்தது... காலணி அணிந்தார் அண்ணாமலை...!

 
annamalai

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கைக்கு ஏற்று, அண்ணாமலை காலணி அணிந்தார்.

தமிழக முன்னாள் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையில், காலணி அணியமாட்டேன் என்று சபதம் விடுத்திருந்தார். அதற்கேற்றவாறே, எங்கு சென்றாலும் காலணி அணியாமலேயே சென்றார்.

annamalai

இந்நிலையில், இன்று சென்னை, வானகரத்தில் உள்ளதொரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி விழாவில், பாஜக மாநிலத் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியுள்ள நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர் அதிகாரபூர்வமாக கட்சி தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது, அண்ணாமலையை காலணி அணியுமாறு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, நயினார் நாகேந்திரனின் கோரிக்கைக்கு இணங்க, அண்ணாமலை காலணியை அணிந்து கொண்டார்.