வனத்துறையினரை கண்டித்து வருசநாடு கிராமத்தினர் தொடர் போராட்டம்

 
ச்

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு வனத்துறையினரை கண்டித்து வருசநாடு பகுதியில் பல தலைமுறையாக வசித்து வரும் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்காவுக்குட்பட்ட வருசநாடு உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பாளர்கள் என வெளியேற்ற மேகமலை புலிகள் காப்பக வனத்துறையினர் முயற்சித்துவருகின்றனர். வனத்துறையினரின் நடவடிக்கையை நிறுத்தக் கோரி மலைகிராம மக்கள் 2வது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பளித்தால் போராட்டம் கைவிடப்படும், இல்லையெனில் போராட்டம் தொடரும் என வருசநாடு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தேனி மாவட்டத்தில், அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகத்தின் (ABR) பகுதியான மேகமலை – வருசநாடு பகுதிகளில் 5,072.653 ஹெக்டேர் நிலத்தில், 9 ஊராட்சிகளில் பரவி வாழும் சுமார் 25,000 பேரை உச்சநீதிமன்றம் வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடதக்கது.