வைரலாகும் வீடியோ..! உயிரைப் பணயம் வைத்து, பைக்கை ஓட்டிக் கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த நபர்..!
கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி சாலையில், சிங்காநல்லூர் நோக்கி இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற இளைஞர், ஒரு கையால் பைக்கின் ஹேண்டில்பாரைப் பிடித்தபடி, மற்றொரு கையால் பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரின் மேல் வைத்திருந்த லேப்டாப்பை பயன்படுத்திக்கொண்டே ஆபத்தான முறையில் பயணித்துள்ளார்.
இரவு நேரத்தில் அதிகளவில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போதிலும், சிறிதும் அச்சமின்றித் தனது கவனம் முழுவதையும் லேப்டாப் திரையிலேயே வைத்துக்கொண்டு அவர் பைக்கை இயக்கியுள்ளார். இதை சாலையில் சென்ற பிற பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், அந்த நபரின் செயலை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
அப்படி என்ன அவசரம்..? உயிரைப் பணயம் வைத்து, பைக்கை ஓட்டிக் கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த நபர்..!#Coimbatore | #Bike | #Laptop | #Work | #PolimerNews pic.twitter.com/fudAUw8udb
— Polimer News (@polimernews) August 5, 2026

