#BREAKING மின்சாரப் பேருந்து டெண்டர் ரத்தை வாபஸ் பெற்ற தவெக அரசு

 
ச்

1,000 குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ரத்தை கடும் எதிர்ப்புக்குப் பிறகு வாபஸ் பெற்ற தவெக அரசு. 

சென்னையில் அதிகரித்து வரும் பயணியரின் போக்குவரத்து தேவையைச் சமாளிக்கும் வகையில், எம்.டி.சி., எனும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், தன் பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டது. அதன்படி, கடந்த தி.மு.க., ஆட்சியில் தனியார் பங்களிப்புடன், ஜி.சி.சி., எனப்படும் மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில், 1,000 புதிய ‘ஏசி’ மின்சார பேருந்துகள் இயக்க, ‘டெண்டர்’ வெளியிடப்பட்டது. சட்டசபை தேர்தலுக்கு முன், கடந்த மார்ச் மாதம், இந்த டெண்டர் வெளியிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, இந்த டெண்டரை திறக்கும் தேதி,  11 முறை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த டெண்டரை, மாநகர போக்குவரத்து கழகம், நேற்று ரத்து செய்தது. 

இந்நிலையில் 1,000 குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ரத்தை கடும் எதிர்ப்புக்குப் பிறகு வாபஸ் பெற்ற தவெக அரசு. டெண்டர் ரத்து பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெண்டர் ரத்தை இன்று தவெக அரசு வாபஸ் பெற்றது.