"த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன"- மு. க. ஸ்டாலின்

 
MKstalin

மத்திய மாநில உறவுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குரியன் குழுவை மாநில அரசு கலைத்த நிலையில், நீதியரசர் குரியனுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குழுவைக் கலைத்த மாநில அரசின் முடிவு மாநில சுயாட்சி செயல்பாடுகளுக்கு பின்னடைவு என்று அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு! இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன. நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது. இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.