இது யார் செஞ்ச வேலை? - அரசு பேருந்தில் இருந்த TVK BOARD

 
ச்

திருச்சி மண்டல அரசு பேருந்து ஒன்றின் மின்னணு வழித்தடப் பலகையில் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிப் பெயர் ஒளிபரப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 



திருச்சியிலிருந்து கம்பம் செல்லும் அரசுப் பேருந்தில் டிஜிட்டல் எல்இடி பெயர்ப் பலகையில் தமிழக வெற்றிக் கழகம் என ஆங்கிலத்தில் ஒளிபரப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் மென்பொருளை ஹேக் செய்து கட்சிப் பெயரைப் பதிவிட்டதாகவும், சம்பவம் கவனத்திற்கு வந்த உடனே மதர்போர்டு மாற்றப்பட்டு சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.