டிரம்ப் நிர்வாகத்தின் அடுத்த செக்..! இனி அமெரிக்கரைத் திருமணம் செய்தாலே கிரீன் கார்டு கிடைத்துவிடாது..!

 
1 1

அமெரிக்காவில் க்ரீன் கார்டு எனபது  ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது.இதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எளிதாக கிரீன் கார்டு கிடைக்கும். அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும். ஆனால் முறைகேடாக கிரீன் கார்டு பெற பலர் திருமணம் செய்து கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன் கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளது.அதன்படி அமெரிக்கக் குடிமகனைத் திருமணம் செய்து கொள்வது மட்டுமே கிரீன் கார்டுக்கு உத்தரவாதம் அளிக்காது என்று அமெரிக்க குடிவரவு துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தற்போது திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன . குடியுரிமை பெறுவதற்காக மட்டுமே திருமணம் நடந்ததா? அல்லது அவர்கள் உண்மையிலேயே திருமணம் செய்து 'கொண்டார்களா? என்பதை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்வார்கள்.

கணவன் -மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால், அவர்களின் கிரீன் கார்டு விண்ணப்பத்துக்கு சிக்கல் ஏற்படும். ஒன்றாக வாழ்வதுதான் உங்களுக்கு கிரீன் கார்டைப் பெற்றுத் தரும். பலர் வேலை, படிப்பு, வசதி ஆகியவற்றுக்காக வெவ்வேறு இடங்களில் இருப்பதாக கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. நீங்கள் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால் அந்த திருமணத்தை பற்றி கேள்வி அதிகாரிகள் கேட்பார்கள். உங்களுக்குத் திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு வேண்டுமென்றால், நீங்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்றனர்.