'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' பட டிரெய்லர் வெளியீடு..!

 
1

பாசில் கதாநாயகனாக நடித்துள்ள 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் பகத் பாசில் மேஜிக் கலைஞராகவும், குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மாயாஜாலம் கலந்த ஃபேன்டசி கதைக்களத்தில் கால பைரவா இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.