அதிமுகவிற்கு பந்தயம் கட்டி தோற்றுப்போன தொண்டர் கால் கிழிப்பு

 
ரத்தம்

தூத்துக்குடியில் அதிமுகவிற்காக பந்தயம் கட்டி தோற்றுப்போன தொண்டர் ஒருவர் ரத்தத்தை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தூத்துக்குடி திரவியபுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வகுமார். அதிமுக தொண்டர். கடந்த 1972 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் கட்சி துவங்கப்பட்டதிலிருந்து அதிமுகவில் கொள்கை பிடிப்புடன் இருந்து வரும் இவர், அதிமுக தொண்டனாகவே இருந்து வருகிறார். இதுவரை கட்சி பதவிகள் எதுவும் வகிக்காத செல்வக்குமார் கட்சிக்காக பல்வேறு தேர்தலில் தொண்டனாக பணிபுரிந்து வந்துள்ளார். அதிமுக மீதும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீதும் மிகுந்த பற்று கொண்டவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 10 முதல் 30 தொகுதியிலாவது வெற்றிபெறும் என செல்வகுமார் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக தொண்டரிடம் பந்தயம் கட்டி சவால் விட்டிருந்தார். மேலும் அவ்வாறு அதிமுக வெற்றி பெறாவிட்டால் என்னிடம் பணம் கிடையாது நான் ரத்தத்தை எனது கட்சிக்காக வழங்குகிறேன் என்று கூறி இருந்தார்.  இதைத் தொடர்ந்து அதிமுக பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை முன்னிட்டு திமுக தொண்டரிடம் கட்டிய பந்தயத்தை நிறைவேற்றும் வகையில் தனது குதிங்காலில் இரண்டு இடங்களில் சிறியதாக கத்தியால் கிழித்து ரத்தத்தை எடுத்து காண்பித்து கட்சிக்காக எனது ஒரு சுற்று ரத்தத்தை தருகிறேன் என கூறியுள்ளார்.