HM தலைமுடியை இழுத்துப்போட்டு அடித்த ஆசிரியை! மாணவர்கள் அதிர்ச்சி

 
தலைமை ஆசிரியை தலைமுடியை இழுத்துப்போட்டு அடித்த ஆசிரியை

கரூர் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை மாணவர்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கிய இடைநிலை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் கலைமதி. இவர் சரியாக பணியாற்றவில்லை என வட்டார கல்வி அலுவலரிடம்  அரசு பள்ளி தலைமை ஆசிரியை புவனா புகாரளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைமதி, 
தலைமை ஆசிரியையை ஓங்கி அறைந்து தலைமுடியை இழுத்து சேரில் இருந்து தள்ளிவிட்டு அடித்தார். இதனை அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், ஆசிரியை கலைமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  வகுப்பறையிலேயே தலைமை ஆசிரியை மீது இடைநிலை ஆசிரியை தாக்குதல் நடத்திய இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.