“தமிழக அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்திலும் அனுமதிக்காது”
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கான ஆதாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரைக்கிளையில் ஆவணங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கான ஆதாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரைக்கிளையில் ஆவணங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. ஆடு, கோழி பலியிடுவடுதால் மலை தீட்டுப்படும் என பலிக்கு தடை கோரிய மனுவில், பதிலளித்துள்ள தமிழக அரசு, தமிழக அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்திலும் அனுமதிக்காது. தீட்டு என்பது் மனிதர்களுக்கு இடையே இருக்கக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
தர்காவுக்கு உட்பட்ட பகுதியில் ஆடு கோழி பலியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை எனக் குறிப்பிட்டது. மத்திய தொல்லியல் துறை தரப்பில் தனது வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


