தொடங்காத திட்டத்திற்கு விளம்பரம் செய்யும் தமிழ்நாடு அரசு..!
விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டம் தொடங்கும் முன்பே திட்டம் செயல்படுத்த உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெயர் பலகை வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் உணவுத் திட்டம் என பெயரை மாற்றி, 8ம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்து வரும் செப்டம்பர் 17ம் தேதி தொடங்க உள்ளது தவெக அரசு.
தமிழகத்தில் தவெக அரசு பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை, 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து வரும் செப்.17-ம் தேதி முறைப்படி தொடங்கவுள்ளது. இந்நிலையில், திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள அனைத்து பள்ளிகளிலும் விளம்பர பெயர் பலகைகளை பொருத்துமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடங்கப்படாத திட்டத்திற்கு முன்கூட்டியே விளம்பரம் செய்வதற்கு தயார் நிலை பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

