இனிப்பு விற்பனைக்காரர்கள் அனைவரும் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு..!

 
1 1

தீபாவளி பண்டிகைக்கு முன், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் தொழில்முனைவோரும், விற்பனையாளர்களும் அவசியமாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் தயாரிப்பதை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும். பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் தூய்மையை கடைபிடிக்க ஹேர் கேப், கையுறைகள் அணிய தவற கூடாது. மக்களின் ஆரோக்கியத்திற்கான பாதுகாப்பு மிக முக்கியம் என அரசு வலியுறுத்துகிறது.

  • உயர் தரமான எண்ணெய் அல்லது நெய் மட்டுமே இனிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும். 
  • தயாரிப்பு, பொருட்களின் தெளிவு, அதன் செயல்முறை ஆகியவற்றின் தரம் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். 
  • பேக்கேஜிங் மூலமாக தயாரிப்பாளர் பெயரும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியான தேதி போன்ற விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். 
  • உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • தொற்று நிலவரங்கள் பரவாமல் இருக்க கரோனா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

புகார்களுக்கான வசதிகள்

பொது மக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை Tamil Nadu Food Safety Department (TNFSD) வலைதளம், அல்லது மொபைல் செயலி மூலம் பதிவு செய்யலாம். மேலும், 94440 42322 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ்அப் மூலம் புகார்களை அனுப்ப முடியும். இந்த வழிகாட்டுதல்கள் தீபாவளி போன்ற பெரிய பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் அதிகளவில் வாங்கும் இனிப்பு மற்றும் காரசார உணவு பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் அரசின் முக்கியப்பணியாக உள்ளது.