குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

 
tn assembly

கோயில் திருவிழாக்களில் ஆடப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Karakattam Kuravan Kurathi very hot midnight dance part17 by Night Dance  Karakattam
தமிழகத்தில் பெரும்பாலும் கோயில் நிகழ்ச்சிகளின்போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. அவ்வாறு நடத்தப்படும் நிகழ்சிகளில் ஆபாச நடனங்கள் ஆடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் சில கோயில்  திருவிழாக்களின்போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக புகார் எழுந்தது. மேலும் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், குறவன், குறத்தில் ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறியவந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது.