காலை 10 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

 
1

தலைமை செயலக ஊழியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என தலைமை செயலக பணியாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் 40க்கும் மேற்பட்ட துறைகளில் 5500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசு ஊழியர்களாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.தலைமைச் செயலக பணியாளர்களுக்கான பணி நேரம் காலை 10.10 மணிக்கு தொடங்கி மாலை 5.45 மணிக்கு நிறைவடைகிறது. இதனிடையே ஊழியர்கள் பலர் காலதாமதமாக பணிக்கு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசுப் பணியாளர்கள் அனைவரும் சரியாக காலை 10 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.