இந்த கிராமங்களுக்கு தமிழக அரசின் சூப்பர் சர்ப்ரைஸ்.! – தீபாவளி நேரத்தில் வெளியானது மாஸ் அறிவிப்பு!

 
1

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வே.க.ராஜீவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் பாதுகாப்பிற்காக பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, அமைதியான தீபாவளியை கொண்டாடும் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கிராமங்களாக, சிவகங்கை மாவட்டத்தில் வேட்டங்குடிப்பட்டி மற்றும் கொல்லுக்குடிப்பட்டி, ஈரோடு மாவட்டத்தில் வ.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவளி, செம்மாண்டம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி மற்றும் கருக்கங்காட்டுவலசு, செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல், திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரம்பூர் ஆகியவை உள்ளன.

இது தவிர இன்னும் சில கிராமங்களும் இதுபோன்று பட்டாசு தவிர்த்து தீபாவளி கொண்டாடி வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்தை பேணுதல் மற்றும் வன உயிரினங்களின் வாழ்விடங்களை பாதுகாத்தல் ஆகியவற்றில் இக்கிராம மக்கள் பின்பற்றி வரும் முன்னுதாரணமான நடைமுறைகள், இயற்கையுடன் இணைந்து வாழ்வதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

இக்கிராமங்கள் ஆற்றி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் இக்கிராமங்களில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கவும், நாட்டு மர வகைகளை வளர்க்கவும், சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிக்கு எதிராக கடந்த ஐந்து மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் வே.க. ராஜீவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், "தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் (Single Use Plastics) பயன்பாட்டைத் தடுப்பதற்கும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கடந்த ஐந்து மாதங்களில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1. 776 டன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2. தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களைப் பயன்படுத்தியதற்காக இதுவரை ரூ. 1.89 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

3. 11 தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

4. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குள் தொடர்பாக இதுவரை 385 விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கான தடையை முறையாகச் செயல்படுத்துதல், அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் மற்றும் தூய்மையான, நெகிழிப் பொருட்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.