மாணவரின் நூதன போராட்டம்.. களத்தில் இறங்கிய அதிகாரிகள்!

 
மோடி

பட்டுக்கோட்டையில் பார்சல் உணவை, பிளாஸ்டிக் பைக்கு பதிலாக பாத்திரத்தில் தர மறுத்த ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நேற்று தனது 4 வயது தம்பியுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாணவர் ஜெய்குரு நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.

மாணவரின் போராட்ட வீடியோ வைரலான நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்று விசாரணை செய்து ஆய்வு நடத்தினர். பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் கொடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். அதே கையோடு, அருகில் இருந்த மற்ற கடைகளிலும் உணவுகளை ஆய்வு செய்து, சுகாதாரமற்ற முறையில் இருந்த 4 கடைகளுக்கு ரூ.6,000 அபராதமும் விதித்துள்ளனர்.