சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவர் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!

 
tn

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை பிளஸ் 2 தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

tn

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதிகளின் மகனான சின்னதுரை அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.  பள்ளி மாணவர்களுக்கிடையே சாதி வெறி இருந்த நிலையில் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் அவர் இருந்துள்ளார்.  இதை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற சின்ன துரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்திய போது பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை சாதி ரீதியாக தாக்குவதாக அவர் கூறியுள்ளார். குறிப்பிட்ட மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள்,  சின்னதுரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக  வெட்டினர்.  இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

tn


இந்நிலையில் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை பிளஸ் 2 தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். முழுமையான உடல்நலம் பெறாததால் உதவியாளர் மூலமாக மாணவர் பொதுத்தேர்வை எழுதியிருந்தார். சக மாணவர்களால் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் நீண்ட நாள் சிகிச்சை பெற்ற நிலையில் காலாண்டுத் தேர்வை மருத்துவமனையிலேயே எழுதியது குறிப்பிடத்தக்கது.